கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’

கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’
Updated on: 
1 min read

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் தற்காலிகமாக ‘KH 237’ என அழைக்கப்பட்டு வந்தது.

படத்தின் தலைப்பு குறித்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. காரின் கதவுக்கு வெளியே கமல்ஹாசன் நிற்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் ‘சண்டியர்’ என்று தலைப்பிட்டப்பட்ட போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.

கமல்ஹாசனின் ‘237’ படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகின்றனர். இதன்மூலம் அவர்கள் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். இவர்கள் கமலின் ‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர். 

இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். ‘ஆடுஜீவிதம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பாராட்டுகளை பெற்ற சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தொகுப்பு பணியை ஷமீர் மேற்கொள்கிறார்.

முன்னதாக, கடந்த 2004-ல் கமல்ஹாசன் எழுதி, இயக்கி , நடித்திருந்த  ‘விருமாண்டி’ படத்துக்கு முதலில் ‘சண்டியர்’ என்றே தலைப்பிடப்படிருந்தது. மதுரை பின்னணியில் உருவான அந்தப் படத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டால் அது தென்மாவட்டங்களில் பதற்றம் உருவாக காரணமாகலாம் எனக் கூறி  அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது.

இப்பிரச்சினையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டார். அதன்பின், படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’
‘இயக்கம்தான் என் பலம்!’ - சுந்தர்.சி

X