மவுன படத்தை இப்​போது இயக்​கியது ஏன்? - ‘காந்தி டாக்​ஸ்’ இயக்​குநர் விளக்​கம்

மவுன படத்தை இப்​போது இயக்​கியது ஏன்? - ‘காந்தி டாக்​ஸ்’ இயக்​குநர் விளக்​கம்
Updated on
1 min read

விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் ஹைதா​ரி, சித்​தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்​ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்​கும் இந்​தப் படத்தை மராத்தி இயக்​குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யுள்​ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்​படம் உரை​யாடல்​கள் இல்​லாத மவுன படமாக உரு​வாகி​யுள்​ளது.

பான் இந்​தியா படமாக இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளி​யாகும் இப்​படத்​தின் மேக்​கிங் வீடியோ ஏற்​கெனவே வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில் இதன் ரிலீஸ் தேதியை படக்​குழு அறி​வித்​துள்​ளது.

அதன்​படி ஜன. 30-ம் தேதி வெளி​யாகிறது. இதுபற்றி இயக்​குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் கூறும்​போது, “காந்தி டாக்​ஸ்’ என்​பது மவுனத்​தின் மீது வைத்த நம்​பிக்​கை. இந்​திய சினிமா நூற்றாண்​டைக் கடந்த இந்த வேளை​யில், அதன் அடிப்​படை வடிவ​மான தூய நடிப்​பும் உணர்ச்​சி​யும் கொண்ட கதை சொல்​லலுக்​குத் திரும்ப விரும்​பினோம். நடிகர்​கள் அதை ஏற்​றுக்​கொண்​டனர்.

ரஹ்​மானின் இசையே இந்​தப் படத்​தின் குரலாக மாறியது. ஜீ ஸ்டூடியோஸ் மற்​றும் மீரா சோப்​ரா​வின் ஆதர​வுடன்​ நேர்​மை​யான சினி​மாவை உரு​வாக்க முடிந்​தது. இது உணர்​வு​களு​டன் பேசும் அபூர்​வ​மான சினிமா அனுபவ​மாக இருக்​கும்” என்​றார்.

மவுன படத்தை இப்​போது இயக்​கியது ஏன்? - ‘காந்தி டாக்​ஸ்’ இயக்​குநர் விளக்​கம்
தேவ்தத் படிக்கல் 4-வது சதம்: கர்நாடக அணிக்கு தொடர் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in