‘துரந்தர் 2’, ‘டாக்சிக்’ படங்களின் ரன் டைம் 3+ மணி நேரம்: கூடுதல் காட்சி திரையிடுவதில் சிக்கல்

‘துரந்தர் 2’, ‘டாக்சிக்’ படங்களின் ரன் டைம் 3+ மணி நேரம்: கூடுதல் காட்சி திரையிடுவதில் சிக்கல்
Updated on
1 min read

‘துரந்தர் 2’ மற்றும் ‘டாக்சிக்’ ஆகிய 2 படங்களுமே 3 மணி நேரத்துக்கு மேல் ஓடுபவையாக உருவாக்கியுள்ளது படக்குழு.

உலகளவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருக்கிறது யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’. மார்ச் 19-ம் தேதி இந்த இரண்டு படங்களுமே வெளியாகவுள்ளன. தற்போது இந்த இரண்டு படங்கள் ஓடக்கூடிய நேரம் என்னவென்று தெரியவந்துள்ளது. இவை இரண்டுமே 3 மணி நேரத்துக்கு மேல் இருப்பது திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ படம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருக்கிறது. ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’ படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருக்கிறது. 3 மணி நேரத்துக்கு மேல் இருப்பதால் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத சூழல் அமைந்துள்ளது. இந்த இரண்டுமே ஒரு நாளைக்கு 4 காட்சிகளுக்கு மேல் திரையிட முடியாது.

இதில் ‘துரந்தர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், ’துரந்தர் 2’ படத்துக்கு உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே வேளையில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘டாக்சிக்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்குமே பெரியளவில் முதல் நாள் வசூல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

‘துரந்தர் 2’, ‘டாக்சிக்’ படங்களின் ரன் டைம் 3+ மணி நேரம்: கூடுதல் காட்சி திரையிடுவதில் சிக்கல்
அரை இறு​திக்கு முன்​னேறப் போவது யார்? இந்​தியா - மே.இந்தியத் தீவு​கள் இன்று பலப்​பரீட்சை | T20 WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in