இயக்​குநர் விக்​ரம் பட் மீது ரூ.13 கோடி மோசடி புகார்

இயக்​குநர் விக்​ரம் பட் மீது ரூ.13 கோடி மோசடி புகார்
Updated on
1 min read

பிரபல இந்தி திரைப்பட இயக்​குநர் விக்​ரம் பட். இவர், குலாம், பம்​பாய் கா பாபு, ராஸ், 1920 உள்பட பல திரைப்​படங்​களை இயக்கியுள்​ளார்.

இவர் மற்​றும் இவருடைய மனைவி ஸ்வே​தாம்​பரி பட் உள்​ளிட்ட 6 பேர் மீது, ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரைச் சேர்ந்த தொழில​திபர் டாக்​டர் அஜய் முர்​தி​யா​வால் என்​பவர், ரூ.30 கோடி மோசடி செய்​த​தாக அளித்த புகாரில் இரு​வரும் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் உள்​ளனர்.

திரைப்​படங்​களில் முதலீடு செய்​வதற்​காக வாங்​கிய பணத்தை முறைகேடாகப் பயன்​படுத்​தி​ய​தாக​வும் அதில் மோசடி நடந்திருப்ப​தாக​வும் கூறி​யிருந்த வழக்​கில் போலீ​ஸார் அவர்களைக் கைது செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் தற்​போது சிறை​யில் இருக்​கும் அவர் மற்​றும் அவருடைய மகள் கிருஷ்ணா மீது, மற்​றொரு மோசடி புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மும்​பையைச் சேர்ந்த தொழில​திபர் ஒருவரிடம், சினி​மா​வில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் என்று கூறி ரூ.13.5 கோடியை, விக்​ரம் பட் மற்​றும் அவர் மகள் கிருஷ்ணா பட் பெற்​ற​தாக​வும் அதைத் திருப்​பித் தரவில்லை என்​றும் வெர்​சாவா போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். இதையடுத்து பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து வி​சா​ரித்​து வருகின்றனர்.

இயக்​குநர் விக்​ரம் பட் மீது ரூ.13 கோடி மோசடி புகார்
“அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை” - மொழிப்போர்த் தியாகிகள் நாளில் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in