ஹான்ஸ் ஸிம்மருடன் இசை அமைத்த அனுபவம் - வீடியோவுடன் ரஹ்மான் நெகிழ்ச்சி பகிர்வு

ஹான்ஸ் ஸிம்மருடன் இசை அமைத்த அனுபவம் - வீடியோவுடன் ரஹ்மான் நெகிழ்ச்சி பகிர்வு
Updated on: 
1 min read

வெவ்வேறு உலகங்களை இணைக்கும் அழகான வழி இசை என ‘ராமாயணா’ படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணியாற்றியது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மரும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ராமாயணா’ படத்தில் ஓர் அங்கமாக இருந்தது குறித்தும், ஹான்ஸ் ஸிம்மருடன் பணியாற்றியது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மான் பதிவொன்றை வெளியிடுள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ‘வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் அழகான வழியை இசை கொண்டுள்ளது. ‘ராமாயணா’ படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணியாற்றியது, காலங்கள் கடந்த அந்தக் காவியத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருந்து கொண்டு, புதிய இசை சாத்தியங்களை முயற்சித்துப் பார்த்தது சிறப்பான ஒரு படைப்பாற்றல் பயணமாக அமைந்து இருந்தது.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு  நன்றியுடையவனாக இருக்கிறேன். இன்னும் புதிதாக முயற்சித்து பார்ப்பதற்கும், உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ராமாயணா இசைப் பயணம் குறித்த 4 நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி ஆகியோர் படத்தின் இசை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிதேஷ் திவாரி இயக்கி இருக்கும் 'ராமாயணா’ படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹான்ஸ் ஸிம்மருடன் இசை அமைத்த அனுபவம் - வீடியோவுடன் ரஹ்மான் நெகிழ்ச்சி பகிர்வு
‘சொல்வது அவர்கள் வேலை’ - ‘ராமாயணா’ குறித்த கேலிக்கு ரன்பீர் கபூர் பதில்

X