“2014-ல் யாரோ ஒருவர் கண்ட கனவு நனவானது!” - ‘ராமாயணா’ பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் வியப்பு

“2014-ல் யாரோ ஒருவர் கண்ட கனவு  நனவானது!” - ‘ராமாயணா’ பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் வியப்பு
Updated on: 
1 min read

நிதேஷ் திவாரி இயக்​கத்​தில் ‘ராமாயணா’ திரைப்​படம் 2 பாகங்​களாக உரு​வாகி​யுள்​ளது. இதில் ரன்​பீர் கபூர் ராம​ராகவும் சாய் பல்​லவி சீதையாகவும் நடித்​துள்​ளனர். ராவணனாக யாஷ் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் முதல் பாகம் நவ.5-ல் வெளியாகிறது.

இதன் பாடல் வெளியீட்டை அமேசான் மியூசிக் சென்​னை​யில் நடத்​தி​யது. தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத்ரா, ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ், ஏ.ஆர்.ரஹ்​மான் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். தனது இசைக்​குழு​வினருடன் ஏ.ஆர்.ரஹ்​மான் படத்​தின் பாடல்​களைப் பாடினார்.

பின்​னர் அவர் பேசும்​போது, “பள்​ளி​யில் நான் பார்த்த ராமாயணம், நாடகங்​களில் பார்த்த ராமாயணம், அப்​புறம் லங்​கேஸ்வரன், இப்​போது இந்த ராமாயணம் என இந்​தப் பயணத்​தில் அதி​கம் கற்​றுக்​கொண்​டேன். பெற்​றோரிடம், குழந்​தைகளிடம், மனைவி​யிடம் எப்​படி நடந்து கொள்ள வேண்​டும் என்​பதை ராமாயணம் சொல்​கிறது.

இன்​றைய உல​கிற்கு இது அவ​சி​ய​மானது. நியூயார்க்​கைச் சேர்ந்த சதீஷ் என்ற என்​பவர் 2014-ல் எனக்கு அனுப்​பிய மின்​னஞ்​சலில், ‘ராமாயணத்தை அடிப்​படை​யாகக் கொண்டு நீங்​கள் உல​கெங்​கும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்​சியை உரு​வாக்​கு​வீர்​கள்’ என்று அவர் கனவில் கண்​ட​தாகக் குறிப்​பிட்​டிருந்​தார்.

எனக்கு அதிர்ச்சி, 2026-ல்​ நான் என்ன செய்​யப் போகிறேன் என்​ப​தைப் பற்றி 2014-ல் ஒரு​வ​ரால் எப்​படி கனவு காண முடிந்​தது என்று வியந்​தேன். அத​னால் தான் இதைப் பகிர்ந்து கொள்ள நினைத்​தேன். இந்​தப் படத்​துக்​காக ஹான்ஸ் ஜிம்​மருடன் இணைந்து இசையமைத்​தது மறக்க முடி​யாத நிகழ்வு” என்​றார்

“2014-ல் யாரோ ஒருவர் கண்ட கனவு  நனவானது!” - ‘ராமாயணா’ பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் வியப்பு
நேதாஜி, ஹிட்லர் + பிரபாஸ்: ‘ஃபவுஜி’ டீசர் வெளியீடு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in