நேதாஜி, ஹிட்லர் + பிரபாஸ்: ‘ஃபவுஜி’ டீசர் வெளியீடு!

நேதாஜி, ஹிட்லர் + பிரபாஸ்: ‘ஃபவுஜி’ டீசர் வெளியீடு!
Updated on: 
1 min read

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபவுஜி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 2027 மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டீசர் எப்படி? - சுதந்திரப் போராட்டக் கால பின்னணியில் டீசர் தொடங்குகிறது. 1972 பெர்லினில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அடால்ப் ஹிட்லர் இடையே காரசார உரையாடல் நடக்கிறது. பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட ஜெர்மனியின் உதவியைக் நாடும் சுபாஷ் சந்திரபோஸிடம், ஹிட்லர் இந்தியர்களின் பலம் குறித்து விவாதிக்கிறார்.

தொடர்ந்து, பிரிட்டனின் உளவுத்துறையைச் சமாளித்து, பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஊடுருவ முடியாத ரகசிய குறியீட்டை உருவாக்கும் ஒரு இந்திய வீரரைப் பற்றி நேதாஜி சொல்கிறார். பிரிட்டிஷாரால் 'ஃபவுஜி' என்று அழைக்கப்படும் அந்த முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபாஸ் தோன்றுகிறார். 

பீரியட் படம் என்று எடுத்தால் கூட தெலுங்கு இயக்குநர்கள் மசாலா கலந்து தான் கொடுப்பார்கள் போலிருக்கிறது. அதிலும் நேதாஜியை பிரபாஸுக்கு பில்டப் வசனம் பேச வைத்திருப்பதெல்லாம் ரொம்ப டூ மச். அதிலும் பக்கா தெலுங்கு சினிமா பாணியில் ஹிட்லரிடம் நேதாஜி பன்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். சரியான திரைக்கதையும், நேர்த்தியான மேக்கிங்கும் இருந்தால் படம் பேசப்படும். aa

நேதாஜி, ஹிட்லர் + பிரபாஸ்: ‘ஃபவுஜி’ டீசர் வெளியீடு!
சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in