

நடிகை தபு, மும்பை வெர்சோவா பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
காத்ரெஜ் பிராப்பர்டிஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்பில் 2,153 சதுர அடி பரப்பளவிலான வீட்டை அவர் வாங்கியுள்ளார். 2 கார் நிறுத்தும் இடங்களுடன் சேர்த்து அவர் இதை வாங்கி உள்ளார். இதில் சுமார் 127 சதுர அடி பரப்பளவு கொண்ட பால்கனியும் அடங்கும். சொத்து பதிவு ஆவணங்களின் படி ரூ.5.24 லட்சம் முத்திரைக் கட்டணமும் ரூ.30 ஆயிரம் பதிவுக் கட்டணமும் அவர் செலுத்தி உள்ளார்.