

தமிழில் கவின் ஜோடியாக ‘ஸ்டார்’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி முகுந்தன். மலையாளத்தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்வம் மாயா’ படங்களில் நடித்துள்ள அவர், ‘இதயம் முரளி’, ஹரீஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது இந்திக்குச் செல்கிறார். இவர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது ப்ரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்சுவையுடன் கூடிய ஃபேன்டஸி படமாக உருவாகும் இதில் கார்த்திக் ஆர்யன் இச்சாதாரி நாகமாக நடிக்கிறார்.