துபா​யில் நடக்க இருந்த ஷாருக்கானின் ‘கிங்’ ஷூட்​டிங் ரத்து

துபா​யில் நடக்க இருந்த ஷாருக்கானின் ‘கிங்’ ஷூட்​டிங் ரத்து
Updated on
1 min read

இந்தி நடிகர் ஷாருக்​கான் தற்​போது நடித்து வரும் திரைப்​படம் ‘கிங்’. இதை ‘பதான்’ படத்தை இயக்​கிய சித்​தார்த் ஆனந்த் இயக்கி வரு​கிறார். இதில் அனில் கபூர், ராணி முகர்​ஜி, தீபிகா படு​கோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்பட பலர் நடிக்​கின்​றனர்.

இப்​படத்​துக்​காக பாலை​வனத்​தில் அனில் கபூர், சுஹானா கான் பங்​கேற்​கும் ஆக் ஷன் காட்​சியை படமாக்க இருந்​தனர். ஏப்​.9-ம் தேதி முதல், ஒரு வார காலம் அங்கு படப்​பிடிப்பை நடத்த முடிவு செய்​திருந்​தனர். ஐக்​கிய அரசு அமீரகம் அதற்​கான அனு​ம​தியை வழங்கி இருந்​தது.

மத்​திய கிழக்​கில் நடந்து வரும் போர் பதற்​றம் காரண​மாக இப்போது அத்​திட்​டத்தை படக்​குழு ரத்து செய்​து​விட்​டது. அக்காட்சிகளை மும்​பை​யின் விலே பார்லே பகு​தி​யில் செட் அமைத்து படமாக்க உள்​ள​தாக தெரி​வித்​துள்​ளனர். இப்​படம் டிச.24-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

துபா​யில் நடக்க இருந்த ஷாருக்கானின் ‘கிங்’ ஷூட்​டிங் ரத்து
“இயக்​குநர் நல்ல மனநிலை​யுடன் இருந்​தால் நல்ல படம் உரு​வாகும்”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in