கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ் தேதி மாற்றம்

கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ் தேதி மாற்றம்
Updated on
1 min read

கீர்த்தி சுரேஷ் நடித்​துள்ள இந்தி படமான ‘ரஃப்​தார்’ ரிலீஸ் தேதி மாற்​றப்​பட்​டுள்​ளது.

பாலிவுட் நடிகர் ராஜ்கு​மார் ராவ் ஹீரோ​வாக நடித்​துள்ள ‘ரஃப் ​தார்’ படத்​தில் கீர்த்தி சுரேஷ் நாயகி​யாக நடித்​துள்​ளார். இதில் அனுராக் தாக்​கூர், ரோஹன் வர்​மா, தான்யா மணிக்​தலா, ரஜத் கபூர் ஆகியோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். அமே​சான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்​படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்​கி​யுள்​ளார். ராஜ்கு​மார் ராவின் மனை​வி​யும் நடிகை​யு​மான பத்​ரலே​கா, தனது காம்பா ஃபிலிம் மூலம் இப்படத்தைத் தயாரித்​துள்​ளார்.

இப்​படம் ஜூலை 24-ல் வெளி​யாக இருந்த நிலை​யில் இப்​போது, அக்​.16-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. பேராசை, பணம், அதிகாரம் ஆகிய​வற்​றின் பின்​னணி​யில், ஓர் ஆணுக்​கும் பெண்ணுக்கும் இடையே ஏற்​படும் காதல், லட்​சி​யப் போராட்டத்தை விவரிக்​கும் டிரா​மா​வான இப்​படம் கல்​வித்​துறையின் பிரச்​சினையை பேசுகிறது என்​கிறார்​கள்​.

கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ் தேதி மாற்றம்
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in