Published : 27 May 2023 01:56 PM
Last Updated : 27 May 2023 01:56 PM

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’

மும்பை: லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாகியுள்ள ‘மும்பைகர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநகரம்'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

'மும்பைகர்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் நேரடி இந்திப் படம் இது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x