‘வீரம்’ ரீமேக்கில் ‘நாட்டு நாட்டு’ ஸ்டெப்களுடன் சல்மான் கான், வெங்கடேஷ் நடனம்

‘வீரம்’ ரீமேக்கில் ‘நாட்டு நாட்டு’ ஸ்டெப்களுடன் சல்மான் கான், வெங்கடேஷ் நடனம்
Updated on
1 min read

சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகவுள்ள ’கிசி கா பாய் கிசி ஜான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘யென்டம்மா’ பாடலில் ‘நாட்டு நாட்டு’ பாடலில் பிரபலமடைந்த நடன ஸ்டெப்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘யென்டம்மா’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் ’கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் சிவா இயக்கத்தில் தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘யென்டம்மா’ எனும் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலில் சல்மான் கான், வெங்கடேசுடன் இணைந்து ராம் சரணும் நடன மாடியுள்ளார்.

சல்மான் கான், வெங்கடேஷ், ராம் சரண் ஆகிய மூவரும் வேஷ்டி அணிந்துகொண்டு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலின் பிரபல நடன ஸ்டெப்களை இப்பாடலுக்கு ஆடியுள்ளனர். இதனால் இப்பாடல் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in