அஜித், விஜய், கார்த்தியை இயக்க இந்தி இயக்குநர் ஆசை

அஜித், விஜய், கார்த்தியை இயக்க இந்தி இயக்குநர் ஆசை
Updated on
1 min read

பிரபல இந்திப் பட இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர் ‘கோல்மால்’, ‘சிங்கம்’, ‘கோல்மால் ரிட்டர்ன்ஸ்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இப்போது, ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘சர்க்கஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் எந்த ஹீரோவை இயக்க ஆசை என்று ரோகித் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அனைத்து தென்னிந்திய ஹீரோக்களுடன் பணியாற்ற ஆசை இருக்கிறது. அஜித், விஜய், கார்த்தி, அல்லு அர்ஜுன் உட்பட அனைத்து ஹீரோக்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in