Published : 06 Oct 2021 15:44 pm

Updated : 06 Oct 2021 15:44 pm

 

Published : 06 Oct 2021 03:44 PM
Last Updated : 06 Oct 2021 03:44 PM

முதலில் 'அனிமல்'; பின்பு 'பிரபாஸ் 25': சந்தீப் ரெட்டி வாங்கா திட்டம்

after-animal-only-sandeep-reddy-vanga-plans-prabhas-25

மும்பை

'அனிமல்' படத்தை முடித்துவிட்ட பிறகே பிரபாஸின் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (அக்டோபர் 7) வெளியாகவுள்ளது.

முன்னதாக, ரன்பீர் கபூர் நடிக்கவுள்ள 'அனிமல்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. டி-சீரிஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், பரினிதி சோப்ரா, அனில் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரபாஸ் 25 அறிவிப்பு வெளியாவதால், பலரும் 'அனிமல்' படம் கைவிடப்பட்டதாகக் கருதினார்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்படவில்லை. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி, 6 மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.

'அனிமல்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டே, பிரபாஸின் 25-வது படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!


அனிமல்அனிமல் படப்பிடிப்புசந்தீப் ரெட்டி வாங்காசந்தீப் ரெட்டி வாங்கா திட்டம்சந்தீப் ரெட்டி வாங்கா முடிவுரன்பீர் கபூர்பிரபாஸ்பிரபாஸ் 25அனில் கபூர்One minute newsAnimalAnimal shootingSandeep reddy vangaSandeep reddy vanga plansRanbir kapoorPrabhasPrabhas 25Anil kapoor

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x