

‘தடம்’ படத்தின் இந்தி ரீமேக்கில், சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் ‘தடம்’. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க, தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகி பாபு, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ஆக்ஷன் க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், கடந்த வருடம் (2019) மார்ச் 1-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், அருண் விஜய் படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற பெயரையும் பெற்றது.
எனவே, அப்போதிலிருந்தே இந்தப் படத்தைத் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்தியில் ஷாஹித் கபூரும், தெலுங்கில் ராம் போத்தினேனியும் நடிக்கலாம் என்று கூறப்பட்டது.
அதன்படி, தெலுங்கில் ராம் நடிக்க ‘ரெட்’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. கிஷோர் திருமலா இயக்கிவரும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ், மாளவிகா ஷர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தி ரீமேக்கில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...