ராமோஜி ராவ் பிலிம் சிட்டி பற்றி சர்ச்சை கருத்து: நடிகை கஜோல் விளக்கம்

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி பற்றி சர்ச்சை கருத்து: நடிகை கஜோல் விளக்கம்
Updated on
1 min read

இந்தி நடிகை கஜோல் இப்போது ‘மா’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஷால் புரியா இயக்கியுள்ள இந்த ஹாரர் படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கஜோல், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் பற்றிப் பேசினார். அப்போது அது, பேய்கள் நிறைந்த இடத்துக்கான எடுத்துக்காட்டு என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கஜோல் அளித்துள்ள விளக்கத்தில், “நான் நடித்துள்ள பல படங்களின் படப்பிடிப்புகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்துள்ளன. அங்கு பலமுறை தங்கியிருக்கிறேன். படப்பிடிப்புக்கு ஏற்ற சூழலை அங்கு நான் கண்டிருக்கிறேன். குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in