‘தெறி’ இந்தி ரீமேக் - கவுரவ தோற்றத்தில் சல்மான் கான்!
‘தெறி’ இந்தி ரீமேக்கில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. இதனை அட்லி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் முரத் கேட்டாணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘பேபி ஜான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கலீஸ் இயக்கியுள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் சல்மான் கான் நடித்துள்ளார். அவரும், வருண் தவானும் நடித்துள்ள காட்சியினை அட்லி இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்தக் காட்சி, படத்தின் இறுதியில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
அட்லி அடுத்து இயக்கவுள்ள படத்தில் சல்மான் கான் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் அவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தில் சின்ன காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார். இதற்காக சல்மான் கான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
