Published : 28 May 2023 05:08 AM
Last Updated : 28 May 2023 05:08 AM

ஜெயிலர் படத்துக்காக தமன்னா நடனம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, சிவராஜ் குமார், சுனில் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மோகன்லால் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்டக் காட்சிகளில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் ஒன்றை நடிகை தமன்னா கொடுத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்துக்காக நடனக் காட்சியில் பங்கேற்கும் அவர், அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், நடன இயக்குநர் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் காட்சிகள், இயக்குநர் நெல்சன் பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலுடன் படப்பிடிப்பு முடிவடையும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x