Published : 21 May 2023 09:55 PM
Last Updated : 21 May 2023 09:55 PM

ஜப்பான் | ஒசாகா திரைப்பட விழா: சிறந்த நடிகர் விஜய், பா.ரஞ்சித்துக்கு சிறந்த இயக்குநர் விருது

மாஸ்டர் படத்தில் விஜய் | கோப்புப்படம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடத்தப்படுகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021 வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மணிகண்டன், இயக்குநர் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் இதில் விருது வென்றுள்ளனர். விருது வென்றவர்கள் விவரம்..

  • சிறந்த தமிழ் திரைப்படம் - சார்பட்டா பரம்பரை
  • சிறந்த நடிகர் - விஜய் - மாஸ்டர்
  • சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் - தலைவி
  • சிறந்த இசையமைப்பாளர் - யுவன்சங்கர் ராஜா - மாநாடு
  • சிறந்த ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் - கர்ணன்
  • சிறந்த இயக்குநர் - பா.ரஞ்சித் - சார்பட்டா பரம்பரை
  • சிறந்த திரைக்கதை - வெங்கட் பிரபு - மாநாடு
  • சிறந்த புரொடக்ஷன் ஹவுஸ் - ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஓபன் விண்டோ புரொடக்ஷன்ஸ், விஷ்பெர்ரி பிலிம்ஸ் - மண்டேலா
  • சிறந்த நடன அமைப்பு - தினேஷ் குமார் - மாஸ்டர் (வாத்தி கம்மிங்)
  • சிறந்த துணை நடிகர் - மணிகண்டன் - ஜெய் பீம்
  • சிறந்த துணை நடிகை - லிஜோமோல் ஜோஸ் - ஜெய் பீம்
  • சிறந்த நகைச்சுவை நடிகர் - ரெடின் கிங்ஸ்லி - டாக்டர்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாரா வின்சென்ட் - டாக்டர்
  • சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி - மாஸ்டர்
  • சிறந்த படத்தொகுப்பு - பிரவீன் கே.எல் - மாநாடு
  • சிறந்த சண்டை அமைப்பு - திலீப் சுப்பராயன் - சுல்தான்
  • சிறந்த கலை அமைப்பு - ராமலிங்கம் - சார்பட்டா பரம்பரை
  • சிறந்த VFX குழு - Nxgen மீடியா - டெடி
  • சிறந்த ஒலி வடிவமைப்பு - உதய் குமார் - அரண்மனை 3
  • சிறப்பு விருது - மண்டேலா

— Osaka Tamil International Film Festival (@osaka_tamil) May 21, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x