Last Updated : 05 Sep, 2017 05:17 PM

 

Published : 05 Sep 2017 05:17 PM
Last Updated : 05 Sep 2017 05:17 PM

இப்போது இசையில் இரைச்சல் அதிகம்: ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல்

இப்போது இசையில் இரைச்சல் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்திருக்கும் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில் தொடர்ச்சியாக முன்னணி இசையமைப்பாளராக இருப்பதன் ரகசியம் குறித்த கேள்விக்கு, அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:

கடவுள் எனக்கு நல்ல சக்தியைக் கொடுத்திருக்கிறார். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், டாப் 5 இடத்தில் நான் வர வேண்டும், என் பாடல்கள் பேசப்பட வேண்டும் என்ற குறுகிய மனநிலையில் இருக்க விரும்பவில்லை. புதிய முயற்சிகள் செய்ய ஆசைப்படுகிறேன். இன்னும் கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.

ஒரு சமையல்காரர் தனது சமையலை முதலில் ருசித்திப் பார்ப்பார். அதே மாதிரி என் இசையை நான் முதலில் சோதித்துப் பார்ப்பேன். எனக்கு கேட்பதற்கு போரடித்தால் அந்த ட்யூனை படக்குழுவினரிடம் கொடுக்க மாட்டேன். புதிதாக இருக்கிறது என்று நினைத்தால் அதை பயன்படுத்துவேன். காரணம், ரசிகர்கள் ஒரு பாடலை பல முறை கேட்கிறார்கள். அவர்களுக்கு போரடிக்கக் கூடாது. இப்போது இசையில் இரைச்சல் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். காரணம், இசையை உருவாக்க நேரமில்லை. முன்பு மாதிரி லைவ்வாக இசைக்கருவிகளால் இசை உருவாக்கப்படவில்லை.

மெலடி, கர்நாடக சங்கீதப் பாடல்கள் குறைந்துவிட்டன. கர்நாடக சங்கீதப் பாடல்களுக்கு தகுந்த கதைகள் வந்தால் தான், அந்த மாதிரி இசை உருவாகும். அப்படிப்பட்ட கதைகளை உருவாக்க தயாரிப்பாளர்கள் இல்லை. நான் உருவாக்கிய பாடல்களை ஒரு வாரம் கழித்துக் கேட்பேன். அதில் பலமுறை திருத்தம் செய்வேன். அதனால் மட்டுமே, என் பாடல்கள் உருவாக தாமதமாகிறது. எனக்கு திருபதியாக இல்லாமல் பாடல்கள் என் இசைக்கூடத்திலிருந்து வெளியே செல்லாது.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x