Published : 30 Apr 2023 09:15 AM
Last Updated : 30 Apr 2023 09:15 AM

அட்லீயின் ‘ஜவான்’ பாரதிராஜா படக் கதையா?

ஜவான் போஸ்டர்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், ‘ஜவான்’. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பிரியாமணி, சானியா மல்கோத்ரா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் இந்தப் படம், ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது.

விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் இந்தப் படத்தை அட்லீ இயக்கி இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் கமல், அப்பா - மகனாக நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மைய கதையை எடுத்துக்கொண்டு இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப ‘ஜவான்’படத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான், அப்பா-மகன் என 2 கேரக்டரில் நடிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x