Published : 14 Sep 2017 07:32 PM
Last Updated : 14 Sep 2017 07:32 PM

ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே- விஷாலை கிண்டல் செய்த சேரன்

விவசாயிக்கு ஒரு ரூபாய், தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு என ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே என்று விஷாலை இயக்குநர் சேரன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

'துப்பறிவாளன் ' படத்தின் திரையரங்க வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்தார்.

இந்நிலையில் இதை கிண்டல் செய்யும் விதமாக சேரன் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''சங்கம் கொடுத்துவந்த தயாரிப்பாளர்கள் இன்சூரன்ஸுக்கு பணம் கட்டாமல் 120 பேருக்கு கேன்சல் செய்யச் சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் சூப்பர்ல.

ஒரே ஸ்டண்ட் காட்சியா இருக்கே 1) தமிழ்சினிமாவே நான் வரலைன்னா அழிஞ்சிருக்கும் 2) தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு 3) விவசாயிக்கு ஒரு ரூபாய்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது என்றும், விவசாயிகள் பாவம் என அறிக்கை விடுபவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்கள் என்றும் இயக்குநர் சேரன் விஷாலை சாடியது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x