Published : 17 Apr 2023 09:36 AM
Last Updated : 17 Apr 2023 09:36 AM

சித்தார்த்தை இயக்குகிறார் அருண்குமார்

நடிகர் சித்தார்த் , ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’, தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படங்களில் நடித்து வருகிறார்.

‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த், படம் தயாரித்து நடிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே ‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார். மேலும் சில படங்களுக்கு இணைத் தயாரிப்பு செய்திருந்தார். இப்போது அவர் தயாரித்து நடிக்கும் படத்தை, அருண்குமார் இயக்குகிறார். இவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x