Published : 13 Apr 2023 02:28 PM
Last Updated : 13 Apr 2023 02:28 PM

செக் மோசடி வழக்கு: ‘சட்டரீதியாக மேல்முறையீடு செய்ய உள்ளோம்’ - இயக்குநர் லிங்குசாமி!

லிங்குசாமி | கோப்புப்படம்

சென்னை: செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். இந்நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

“இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என அறிக்கை மூலம் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

"எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன், கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் உறுதி செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x