Published : 05 Apr 2023 07:30 PM
Last Updated : 05 Apr 2023 07:30 PM

ஆக்‌ஷனுடன் சென்டிமென்ட்  - அருண் விஜய்யின் ‘மிஷன்’ டீசர் எப்படி?

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள‘மிஷன்’ (Mission Chapter 1) அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார்.

இருவரும் இணையும் படத்திற்கு ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர்வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி?: டீசர் புதிய கதைக்களத்துடன் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது. லண்டனில் உள்ள சிறையில் நடக்கும் இந்த கதையில் காவல்துறை அதிகாரியாக எமிஜாக்சன் இன்ட்ரோ ஆகிறார். அருண் விஜய் விஜய்யின் இன்ட்ரோவும், எமி ஜாக்சன் ஃபைட் சீக்வன்ஸூம் கவனம் பெறுகிறது. வெறுமேனே ஆக்‌ஷன் படமாக மட்டுமல்லாமல், டீசரின் இறுதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது. டீசர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x