Published : 05 Aug 2017 08:47 AM
Last Updated : 05 Aug 2017 08:47 AM

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு: நாதஸ்வரத்தை அவமதித்ததாக கமலுக்கு நோட்டீஸ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பெண் நடிகைகள் ஆபாச உடையணிந்து வருவ தால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை. எனவே அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சினி சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் தொலைக்காட்சி யில் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற் றுள்ள நடிகைகள் ஆபாச உடையணிந்து வருகின் றனர். மேலும் அடித்தட்டு மக்களை அவமதிக்கும் வகை யில் பேசுகின்றனர். அடிக்கடி இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை உபயோகிக் கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் தமிழக மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், ஆபாச உடை, ஆபாச செய்கைகளால் இந்நிகழ்ச்சியை குடும்பத் துடன் அமர்ந்து பார்க்க முடியவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகளுடன் இந் நிகழ்ச்சியைப் பார்ப்பவர் களுக்கு தர்ம சங்கடம் ஏற்படு கிறது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற எல்லையை மீறி தமிழக கலாச்சாரத்துக்கும், பாரம் பரியத்துக்கும் எதிராக உள்ளது.

எனவே, பொதுநலன் கருதி இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

நோட்டீஸ்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பாக நடிகர்கள் கமல்ஹாசன், சக்தி, விஜய் டிவி மற்றும் எண்டமோல் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கம் சார்பில் வழக்கறிஞர் துரை குணசேகர் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘நாதஸ்வரத்தை தெய்வீக இசைக் கருவியாக இசை வேளாளர்கள் பாவிக்கின்றனர். கடந்த ஜூலை 14-ம் தேதி ஒளிபரப்பப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை நடிகர் சக்தி ஆணவத்துடன் கையாண்டார். புனிதமான அந்த இசைக் கருவியை, சாப்பிடும் மேஜை மீது அவமதிக்கும் வகையில் போட்டிருந்தார். இந்த செயலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் 7 தினங்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x