Last Updated : 20 Sep, 2016 12:46 PM

 

Published : 20 Sep 2016 12:46 PM
Last Updated : 20 Sep 2016 12:46 PM

துப்பறிவாளன் அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் வினய்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'கத்தி சண்டை' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால். 'துப்பறிவாளன்' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.

ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. அரோல் குரலில் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்காக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார் இயக்குநர் மிஷ்கின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x