Last Updated : 21 Sep, 2017 01:50 PM

 

Published : 21 Sep 2017 01:50 PM
Last Updated : 21 Sep 2017 01:50 PM

ஆர்.ஜே.பாலாஜி - சதீஷ் கருத்து மோதல்: ட்விட்டர் தளத்தில் எழுந்துள்ள சர்ச்சை

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சதீஷ் இருவருக்குமிடையே ட்விட்டர் தளத்தில் ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் சர்ச்சை உருவாகியுள்ளது.

ட்விட்டர் தளத்தில் தன்னை பின் தொடர்பவர்களிடம் கலந்துரையாடி நாட்களாவதால், இன்று கலந்துரையாடலாம் என்று ட்வீட் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அதனைத் தொடர்ந்து பின் தொடர்பவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து வந்தார்.

அப்போது, "உங்களுக்குப் பிடித்த காமெடியன்?" என்ற கேள்விக்கு "சதீஷ். ப்ளீஸ் நம்புங்கள்" என்று பதிலளித்தார் ஆர்.ஜே.பாலாஜி.

இதற்கு பதிலளிக்கும் விதமாக "ப்ரோ. ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது இறுதிநாளில் நீங்கள் போட்ட வீடியோ காமெடியை விடவா? ப்ளீஸ் நம்புங்கள்" என்று சதீஷ் தெரிவித்தார்.

"செம பன்ச். நல்ல காமெடி. இதில் பாதியையாவது படத்திலயும் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். வாழ்த்துகள்" என்று ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்தார்.

இதற்கு, "தேவையில்லாமல் இதை ஆரம்பித்த நண்பருக்கு கீழே கமெண்ட்கள் மூலமாக பதிலளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என்று சதீஷ் தெரிவித்தார்.

இந்த இருவரின் கருத்து மோதல் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதில் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் சதீஷ் என்று தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஆர்.ஜே.பாலாஜியைப் பற்றி சதீஷ் தெரிவித்த கருத்துகள் சரிதான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x