Last Updated : 17 Sep, 2017 03:53 PM

 

Published : 17 Sep 2017 03:53 PM
Last Updated : 17 Sep 2017 03:53 PM

ரஞ்சித் படங்களில் அதிவேகப் படமான காலா

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்களில், குறைந்த நாட்களில் உருவான படமாக 'காலா' அமையவுள்ளது

பெப்சி பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 'காலா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 70% காட்சிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

"ரஞ்சித்தின் படங்களில் மிக வேகமாக படப்பிடிப்பு செய்யப்பட்ட படமாக 'காலா' அமைந்துள்ளது. மேலும், இதுவரை நடத்த படப்பிடிப்பை வைத்து தயாரிப்பாளரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். சென்னை படப்பிடிப்போடு ரஜினியின் காட்சிகள் முடிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மும்பையில் 15 நாட்கள் வரை ரஜினியில்லாமல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது" என்று படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

ரஜினி, ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x