நடிப்புக்கு நயன்தாரா ஓய்வா?

நடிப்புக்கு நயன்தாரா ஓய்வா?
Updated on
1 min read

நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. மேலும் ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, பின்னர் வாடகை தாய் மூலம்இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மா ஆனார்.குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக சினிமாவை விட்டு அவர் விலக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in