Published : 17 Feb 2023 08:07 PM
Last Updated : 17 Feb 2023 08:07 PM

சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஈர்த்த ‘மாவீரன்’ முதல் சிங்கிள் பாடல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ பாடல் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. பாடலுக்கு ஆந்தங்குடி இளையராஜா இன்ட்ரோ கொடுக்க, மொத்த பாடலையும் தனது குரலால் டேக்ஓவர் செய்கிறார் அனிருத். கபிலன் மற்றும் லோகேஷ் இருவரும் இணைந்து பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பாடல் கடந்துள்ளது. பாடல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x