Published : 15 Feb 2023 08:34 PM
Last Updated : 15 Feb 2023 08:34 PM

பிப்.17-ல் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சிங்கிள் - அதிரவைக்கும் க்ளிம்ஸ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ பாடல் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ பாடல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி வெளியாகியுள்ள கிளிம்ஸ் வீடியோ பாடல் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x