Published : 14 Feb 2023 08:10 PM
Last Updated : 14 Feb 2023 08:10 PM

விரைவில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ முதல் சிங்கிள்

சிவகார்த்திகேயன் | கோப்புப்படம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x