Published : 06 Feb 2023 05:42 PM
Last Updated : 06 Feb 2023 05:42 PM

மீண்டும் ‘கீதா கோவிந்தம்’ இயக்குநருடன் கைகோக்கும் விஜய் தேவரகொண்டா

‘கீதா கோவிந்தம்’ பட இயக்குநருடன் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா கைகோக்கிறார். பிரமாண்ட பொருட்செலவில் படம் தயாராக உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் ‘கீதா கோவிந்தம்’. கோபி சுந்தர் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் பரசுராமுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தை தில்ராஜு தயாரிக்க இருக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘லைகர்’ பட தோல்விக்குப் பிறகு கதைகளை நடிகர் விஜய் தேவரகொண்டா கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் சமந்தாவுடன் தற்போது நடித்து வரும் ‘குஷி’ படத்திற்கு பிறகு, 2019-ல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ இயக்குநருடன் விஜய் தேவரகொண்டா இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x