Published : 04 Jan 2023 04:38 PM
Last Updated : 04 Jan 2023 04:38 PM

‘அவர் மிகவும் ஸ்வீட்’ - விஜய் குறித்து சிலாகித்த ஷாருக்கான்

விஜய் குறித்து நடிகர் ஷாருக்கான், ‘அவர் மிகவும் ஸ்வீட் மற்றும் அமைதியானவர். எனக்கு விருந்தளித்து உபசரித்தார்’ என சிலாகித்து கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் ட்விட்டர் கணக்கை தொடங்கி 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், “ட்விட்டரில் 13 ஆண்டுகள் கடந்துவிட்டதை உணர்ந்தேன். ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட உங்களின் அன்பை அறிகிறேன். வாழ்த்துகள், பரிந்துரைகள், மீம்ஸ்கள், ரீ-எடிட்ஸ்கள், எதிர்பார்ப்புகள், அறிவுரைகள் மற்றும் சில விரும்பத்தகாத நடத்தைகள் என எல்லாமே கலந்திருந்தது. உங்கள் அனைவருக்கும் நிஜ உலகில் நல்ல வாழ்க்கை அமைய எனது வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து #AskSrk என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பதிலளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில் ரசிகர் ஒருவர், ‘ஜவான்’, ‘டங்கி’ படங்களுக்குப் பிறகு என்ன? என்று கேட்டிருந்தார். அதற்கு ஷாருக்கான், ‘ஃப்ரீ டைம்’ என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து ரசிகர் ஒருவர், “விஜய் பற்றி கூறுங்கள்” என கேட்க, “அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் அமைதியானவர். எனக்கு அருமையான இரவு உணவையும் கொடுத்தார்” என பதிலளித்துள்ளார்.

தவறவிடாதீர்!


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x