Published : 02 Jan 2023 02:53 PM
Last Updated : 02 Jan 2023 02:53 PM

10 நாளில் ரூ.89 கோடி - வசூலில் மிரட்டும் ரவி தேஜாவின் ‘தமாகா’ 

ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தமாகா’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.89 கோடியை வசூலித்து முன்னேறி வருகிறது.

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா இரட்டை வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ‘தமாகா’ (Dhamaka). ஆக்‌ஷன், காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, ஜெயராம், சச்சின் கெடேகர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம், கிறிஸ்துமஸை ஒட்டிய கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. வெளியான முதல் நாள் படம் ரூ.10 கோடி அளவில் வசூலித்து. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரூ.89 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x