Published : 04 Dec 2022 06:42 PM
Last Updated : 04 Dec 2022 06:42 PM

நாளை வெளியாகும் மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ ட்ரெய்லர்

இயக்குநர் மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அண்மையில் படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் மோகன்.ஜி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பகாசூரன்’ ட்ரெய்லர் நாளை மாலை 5.02மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x