Published : 08 Nov 2022 06:49 AM
Last Updated : 08 Nov 2022 06:49 AM

இந்தியன் 2: கமலின் புதிய தோற்றம் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள், நேற்றுக் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் கமலின் புதிய தோற்றத்தை இயக்குநர் ஷங்கர் நேற்று வெளியிட்டு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், எங்கள் பொக்கிஷம். பன்முகத் திறமை கொண்ட கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x