Published : 29 Oct 2022 06:46 PM
Last Updated : 29 Oct 2022 06:46 PM

'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா'வின் இந்து மதத் தொடர்பும் வெற்றியும்: கங்கனா கருத்து

''திரைப்பட பார்வையாளர்கள் இந்து மதத் தன்மைகளை 'காந்தாரா', 'பொன்னியின் செல்வன்' படங்களில் தொடர்புப்படுத்திகொண்டார்கள். ஆனால், மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது'' என நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அளித்த பேட்டி ஒன்றில், “தென்னிந்திய திரைப்படங்களான 'பொன்னியின் செல்வன் பாகம் 1', 'காந்தாரா' போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எடுபடவில்லை. தற்போது வெற்றியடையும் படங்கள் அனைத்தும் இந்தியத் தன்மை உடையவை.

நாம் 'காந்தாரா' படத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு நுண்ணிய அளவில் பக்தி, ஆன்மிகத்துடன் தொடர்புடையது. 'பொன்னியின் செல்வன்' சோழர்களைப் பற்றியது. பார்வையாளர்கள் இந்து மதத் தன்மைகளையும் மதிப்புகளையும் 'காந்தாரா', 'பொன்னியின் செல்வன்' படங்களில் தொடர்புப்படுத்திகொண்டார்கள். மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால், பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் பாலிவுட் படங்களில் இருக்கிறது. மக்கள் இனி அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

அவரிடம், 'பாலிவுட்டில் நெப்போடிசம் குறைந்துள்ளதா?' என்ற கேள்விக்கு, ''நெருங்கிய அமைப்பாக இருப்பதால் நெப்போட்டிசம் குறையவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள். 'இனி இது வேலைக்கு ஆகாது' என பொதுமக்களுக்கு இப்போது சொல்கிறார்கள். இனியும் இந்த நடிகர்களை ரோல் மாடல்களாக முன்னிறுத்த தேவையில்லை என சாமானிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாம் ஏன் ஸ்ரீராமரையோ, ஏ.பி.ஜே.அப்துல் கலாமையோ முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அவர்கள் கருதுகிறார்கள்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x