Last Updated : 15 Nov, 2016 02:18 PM

 

Published : 15 Nov 2016 02:18 PM
Last Updated : 15 Nov 2016 02:18 PM

டிச.1-ல் வெளியாகிறது மாவீரன் கிட்டு

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' திரைப்படம், டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாவீரன் கிட்டு'. வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது.

இப்படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு. சில காட்சிகளைத் தவிர, மீதமுள்ள மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.

அதனைத் தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளையும் முடித்துவிட்டு, படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இதர இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.

தற்போது டிசம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.

'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x