Published : 20 Oct 2022 02:27 PM
Last Updated : 20 Oct 2022 02:27 PM

திரைத்துறை துளிகள் | ‘காந்தாரா’வுக்குப் புகழாரம்; அறிவியல் கிரைம் த்ரில்லரில் பிரியாமணி

நடிகை பிரியாமணி
  • ஈரான் அரசின் புதிய ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராடி வருகின்றனர். அதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‘தி லெஜண்ட்’ நாயகி ஊர்வசி ரவுதெலாவும், தனது தலைமுடியை வெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடிகர் பசுபதி
  • பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
  • ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஜப்பானில் நாளை வெளியாகிறது. இதற்கான புரமோஷனுக்காக படக்குழு அங்கு சென்றுள்ளது.
இயக்குநர் ராம் கோபால் வர்மா
  • ‘காந்தாரா’வைப் புகழ்ந்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, சூப்பர் ஸ்டார்கள், பிரம்மாண்ட தயாரிப்பு மட்டுமே மக்களை தியேட்டருக்கு இழுத்து வரும் என்ற சினிமாகாரர்களின் முடிவை, சிறிய படமான இது முறியடித்துள்ளது. பெரிய நடிகர்கள் பட சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
  • பிரபாஸ் ஜோடியாக 3 நாயகிகள்: நடிகர் பிரபாஸ், ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’, அமிதாப், தீபிகா படுகோனுடன் ‘புராஜக்ட் கே’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் 3 நாயகிகள் நடிக்கின்றனர். மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நாயகி முடிவாகவில்லை.
நடிகை பிரியாமணி
  • அறிவியல் கிரைம் த்ரில்லரில் பிரியாமணி: லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என் பாலாஜி வழங்க, ஹரி ஹரா பிக்சர்ஸ் தமிழ், கன்னடத்தில் தயாரித்துள்ள படம், ‘டிஆர் 56’. அறிவியல் சார்ந்த கிரைம் த்ரில்லர் கதையான இதில் பிரியாமணி, சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ராகேஷ் சி திலக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நோபின் பால் இசை அமைத்துள்ளார். ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் டிச. 9-ம் தேதி வெளியாகிறது.
  • தமிழுக்கு வரும் வருண் தவான்: பிரபல இந்தி நடிகர் வருண் தவான், ‘பெடியா’ என்ற பான் இந்தியா படம் மூலம் தமிழுக்கு வருகிறார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கிர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். அமர் கவுசிக் இயக்கியுள்ள இது, புராண கதைகளில் வரும் ஓநாயால் (பெடியா) கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறியவரைப் பற்றிய கதையைக் கொண்டது. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x