Published : 12 Oct 2022 08:55 PM
Last Updated : 12 Oct 2022 08:55 PM

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவு என தகவல்

நடிகர் அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்தின் பாங்காங்க் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் பேங்காங்க் சென்றார். பேங்காக்கில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிய காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதாகவும், விரைவில் முழுமையான படப்பிடிப்பு நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக 'துணிவு' தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. பாங்காங் ஷூட்டிங் முடிந்ததையடுத்து நடிகர் அஜித் விரைவில் சென்னை திரும்புவார் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x