Published : 09 Oct 2022 04:41 PM
Last Updated : 09 Oct 2022 04:41 PM

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு?

வெந்து தணிந்தது காடு

சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை தீபாவளி அன்று ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சித்தி இதானி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவருடன் மலையாள நடிகர் சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைபெற்ற நிலையில், படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

படத்தின் ஓடிடி தேதி தள்ளிப்போக காரணம், தீபாவளித் திருநாளையொட்டி ஓடிடியில் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் பெற்றுள்ள நிலையில், அக்டோபர் 21-ம் தேதி படம் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்னும் சில திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x