Published : 14 Sep 2022 05:35 PM
Last Updated : 14 Sep 2022 05:35 PM
லடாக்கில் உள்ள புத்தர் கோயிலில் நடிகர் அஜித் வழிபாடு நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அஜய் இணைந்துள்ளதாக என்று செய்திகள் வெளியானது. 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். அடுத்தக்கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது தாமதமாகி வருகிறது. இந்த இடைவெளியில் நடிகர் அஜித் ஒரு சின்ன ட்ரிப் சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்ற அஜித் அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தப் பயணத்தில் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டு இருந்தார்.
இந்தப் பயணத்தின்போது அஜித்குமார் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்குமாருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் அஜித்குமார் தற்போது புத்தர் கோவிலுக்கும் சென்று வழிப்பட்டார். புத்த விகாரத்தை அஜித்குமார் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Exclusive Video. #Ajith sir #AjithKumar #AK #AK61 pic.twitter.com/MHJQ26cL4F
Sign up to receive our newsletter in your inbox every day!