Published : 11 Sep 2022 02:21 PM
Last Updated : 11 Sep 2022 02:21 PM
''பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க'' என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.
பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. நாட்டை பற்றி அவன் எப்படி கற்பனை செய்து வைத்திருக்கிறான் என நினைத்தால் வியக்க வைக்கிறத்து. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான். அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலி செலுத்துவது நமக்கு புண்ணியம் சேர்க்கும். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க'' என்று தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியின் நினைவு நாளில், வாழ்க பாரதியின் புகழ். pic.twitter.com/pOOwpCOo43
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 11, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT