Last Updated : 28 Oct, 2016 01:19 PM

 

Published : 28 Oct 2016 01:19 PM
Last Updated : 28 Oct 2016 01:19 PM

கொடி படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து

தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கொடி' படத்துக்கு KDM கிடைக்காததால் அதிகாலை காட்சிகளை ரத்து செய்யப்பட்டன.

தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொடி'. துரை.செந்தில்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.

இப்படம் வெளியீட்டில் சிக்கி நிலவி வந்தது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட 'கயல்' மற்றும் 'மாப்ள சிங்கம்' உள்ளிட்ட படங்களின் தோல்வியால் 'கொடி' வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்களிடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பலதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அதிகாலை 4:30 மணி காட்சி திரையிட முடியாமல் போனது. KDM எனப்படும் பாஸ்வேர்டு கிடைக்காததால், படம் வெளியாகுமா என்ற பேச்சு அடிபட்டது.

அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, 6 மணிக்கு அனைத்து திரையரங்குகளுக்கும் KDM கிடைத்தது. இதனைத் தொடர்ந்து படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தெலுங்கில் ஒரு நாள் தாமதமாக நாளை தான் 'கொடி' வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x