Published : 03 Sep 2022 06:16 PM
Last Updated : 03 Sep 2022 06:16 PM

இனி டாக்டர் யுவன் சங்கர் ராஜா - கெளரவ பட்டம் வழங்கியது சத்யபாமா பல்கலை.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது 16-வது வயதில், 1997-ம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பல படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் திரைத் துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அவரது பயணத்தை பாராட்டி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த 31-வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில், அவரது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் ரசிகர் ஒருவர், யுவன் பயோபிக் உருவாக வாய்ப்பிருக்கிறதா என கேட்டபோது, 'இதுவரை அப்படி எந்த ஐடியாவும் இல்லை. அப்படி இருந்தால் அதில் நானே நடிப்பேன்'' என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x