Published : 21 Aug 2022 11:54 AM
Last Updated : 21 Aug 2022 11:54 AM

லெஜண்ட் சரவணனுடன் ரஜினிகாந்த் - வைரலாகும் ட்வீட்

நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. இந்தப் படம் கடந்த மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் இருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் அருள் சரவணன்.லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள்’ என தெரிவித்து ரஜினியுடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

‘தி லெஜண்ட்’ திரைப்படம் வெளியான சமயத்தில், “எனது நடிப்பில் ரஜினி காந்தின் தாக்கம் இருந்தது. அதனை தவிர்க்க முடியவில்லை ” என சரவணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x