Published : 04 Aug 2022 06:31 PM
Last Updated : 04 Aug 2022 06:31 PM

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31-ல் ரிலீஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனத்தைப்பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் என்ன ஸ்பெஷல்?

சமீபத்தில் இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் போஸ்டர் தன் பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் 'நட்சத்திரம் நகர்கிறது' படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வாழ்க்கையை காதல் மூலம் பதிவு செய்யும் படைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழின் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சினிமா என்ற பெருமையை இப்படம் பெறும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x